தச மகா வித்யா தேவிகளின் பெயர்கள்:
- காளி – பரம்பொருளின் இறுதி வடிவம். காலத்தின் வடிவானவள்.
- தாரா – வழிகாட்டியாகவும் பாதுகாவலியாகவும் விளங்கும் தெய்வம். மோட்சத்தைத் தரும் பேரறிவை வழங்கும் ""நீல சரசுவதி" எனும் பெருந்தெய்வமும் இவளே.
- திரிபுரசுந்தரி (ஷோடசி) – மூவுலகிலும் பேரழகி! தாந்திரீக நெறியின் பார்வதி. "மோட்சமுக்தி" என்றெல்லாம் போற்றப்படுபவள்.
- புவனேசுவரி – பிரபஞ்ச வடிவாய்த் திகழும் அன்னை வடிவம்
- பைரவி – அஞ்சத்தகும் அன்னையின் வடிவம்
- சின்னமஸ்தா – தன் தலை தானே அரிந்த தியாகத் திருவுருவம்.[4]
- தூமாவதி – இறப்பின் தெய்வம், விதவையாய்க் காட்சியருள்பவள்.
- பகளாமுகி – எதிரிகளை அடக்கியாளும் தேவதை
- மாதங்கி – இலலிதையின் தலைமை மந்திரிணி
காளி (சமஸ்கிருதம்: काली, காளி) என்றும் காளிகா (சமஸ்கிருதம்:कालिका, காளிகா என்றும் அழைக்கப்படும் இந்து சமயத்தின் சாக்த பிரிவினர் வணங்கும் பெண் கடவுள் சக்தியின் அம்சமாக கருதப்படுகிறார்.
காளி என்ற பெயர் வடமொழியில் உள்ள 'காலா' என்ற வார்த்தையில் இருந்து எடுக்கபட்டதாகும். காளி தேவியாகபட்டவள் காலத்திற்க்கும், மாறுதல்களுக்கும் தேவியாக கருதப்படுகிறார். காளி என்பதற்கு 'காலம்' மற்றும் 'கருப்பு' என்று பொருள். காளனின் (ஈசன்) துணைவி தான் காளி. இவரே ஆதி பராசக்தி என்றும் அழைக்கப்படுகிறார். ஆவாள். இவரைப் பற்றிய செய்திகள் அதர்வண வேதங்களிலும், தேவி மகாத்மியதிலும் விரிவாக வழங்கபட்டுள்ளது. இவரை வழிபடும் முறைகள் பல தந்திரங்களிலும் கூறபட்டுள்ளது. காளி தேவி காலங்களை கட்டுபடுத்தக்கூடியவர் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
தாந்திரீகர்கள் பெரும்பாலும் காளி தேவியையும், காளி தேவியின் யந்திரத்தையும் வைத்து வழிபடுகின்றனர்.வங்காளத்தில் காளி வழிபாடு அனைத்து ஊர்களிலும் உள்ளது.
காலத்திற்கும் மாறுதலுக்கும் அதிபதி | |
தேவநாகரி | काली |
---|---|
வகை | தேவி,மஹாவித்யா |
இடம் | மயானம் |
மந்திரம் |
ஓம் க்ரீம் காள்யை நமஹ ,
ஓம் கபாலின்யை நமஹ, ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்ரீம் பரமேஸ்வாரி
|
ஆயுதம் | கத்தி , சூலம் |
துணை | சிவன் |
தாரா என்பது பத்து மகாவித்யா தேவதைகளில் ஒருத்தியாகக் கூறப்படும் தெய்வம் ஆவாள். தாரை என்பது வடமொழியில் விண்மீனைக் குறிக்கும்.
தாரா, புத்த சமயத்திலிருந்து சாக்த சமயத்துக்கு வந்த தெய்வம் என்று நம்பப்படுகின்றது.[1] சாக்த மரபில்,பாற்கடல் கடைந்தபோது, ஆலகால நஞ்சை உண்ட சிவன், அதன் வீரியம் தாங்காமல் மயங்கியதாகவும், அப்போது, தாரையின் உருவெடுத்து ஈசனைத் தன் மடியில் தாங்கிய உமையவள், அவருக்குத் தன் ஞானப்பாலை ஊட்டி, அவரை சுயநினைவுக்குக் கொணர்ந்ததாகவும் ஒரு கதை சொல்கின்றது.
தாராவின் உருவவியல், காளியை ஒத்தது. இருவருமே, சிவன் மீது நின்ற நிலையிலேயே காட்சி தருவர். எனினும் தாரா, காளி போல கருப்பாக அன்றி, நீலமாகக் காட்சி தருவள். தாராவின் இடையில், புலித்தோலாடையும் கழுத்தில் மண்டையோட்டு மாலையும் காணப்படும். குருதி வடியும் செவ்விதழும் தொங்கிய நாக்கும் தாராவுக்கும் காளிக்குமிடையிலான இன்னோர் ஒற்றுமை. இருவரும் ஒன்றுபோலவே இருந்தாலும், தாந்திரீக நூல்கள், இருவரையும் வேறுபடுத்திக் காட்டுவதுடன், தாரா தாய்மை நிறைந்தவள் என்றும் கூறுகின்றன. எனினும், வங்காளப் பகுதியில் காளியே அதிகளவில் வழிபடப்படுகின்றாள்.
காளியிலிருந்து தாராவை வேறுபடுத்துவது, அவள் கரங்களில் தாங்கியிருக்கும் தாமரையும் கத்தரிக்கோலும் ஆகும். தாராவின் கரங்களில், கத்தி, கபாலம், தாமரை, கத்தரிக்கோல் என்பன காணப்படும். உலக இச்சைகளிலிருந்து தன் அடியவனை வெட்டி விடுவிப்பதை, கத்தரிக்கோல் குறிக்கின்றது
தாய்மை, காமஞ்செறுத்தல் என்பவற்றின் அதிபதி | |
சமசுகிருதம் | Tārā |
---|---|
தமிழ் எழுத்து முறை | தாரா |
வகை | மகாவித்யா, பார்வதி |
மந்திரம் | ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் தாராயை ஹூம் பட் ஸ்வாஹா (தசமகாவித்யா மந்திரம்) ஓம் தாரே துத்தாரே துரே ஸ்வாஹா |
ஆயுதம் | கட்கம், கத்தி |
துணை | சிவன் |
திரிபுரசுந்தரி சக்தி வழிபாட்டு முறையின் முதன்மைக் கடவுள். இலலிதை, இராசராசேசுவரி முதலான பெயர்களிலும் அழைக்கப்படுபவள், பத்து மகாவித்யாக்களில் ஒருத்தியாவாள். ஸ்ரீவித்யா என்றழைக்கப்படும் இவளது முடிந்த முடிவே ஏனைய மகாவித்யாக்கள் ஆகும். ஆதிசக்தியின் மிகவுயர் அம்சமான லலிதையேபார்வதியாகத் திகழ்கின்றாள். தாய் குழந்தையுடன் விளையாடுவது போல, லலிதை தன் அடியவர்களுடன் விளையாடுகின்றாள். மாயையின் வடிவமானதால், அவளே, மகாமாயையும் ஆகின்றாள்.
சிவனால் எரிக்கப்பட்ட காமனின் சாம்பலிலிருந்து தோன்றிய பண்டன் எனும் அரக்கன் சோணிதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு பூவுலகை ஆண்டதுடன், தேவர்களையும் துன்புறுத்தி வந்தான். தேவர்களின் கோரிக்கைக்கிணங்க, தேவியும் ஈசனும், மகா காமேசுவரனாகவும், திரிபுரசுந்தரியாகவும் தோன்றினர். காமனின் ஆயுதங்களான கரும்பு வில்லும் மலர்ப்பாணமும் தாங்கி தேவி அவனைக் கொன்றொழித்தாள்
திருமகள், கலைமகள் பணிபுரிய, ஐந்தேவர்களாலான அரியாசனத்தில் அமர்ந்தருளும் திரிபுர சுந்தரி | |
அதிபதி | |
துணை | காமேசுவரன் |
---|---|
குழந்தைகள் | பிள்ளையார், முருகன் |
புவனேசுவரி இந்து சமய நம்பிக்கைகளில் மகாவித்யா சக்தியின் பத்து அம்சங்களில் நான்காவது சொரூபமாக விளங்குகின்றாள். பௌதீக உலகின் தோற்றத்திற்கு காரணமான மகா சக்தியாக வர்ணிக்கப்படுகின்றாள். மேலும், உலகின் தீயவற்றை அழிப்பவளாகவும், நல்லவற்றை உருவாக்குபவளாகவும் போற்றப்படுகின்றாள். இவளே சரஸ்வதி, இலக்குமி, காளி மற்றும் காயத்ரி முதலான தெய்வங்களின் தாய்த் தெய்வம் என்பர். புராணக்கதைகளும் இந்து மத ஐதீககங்களும் இவளை சக்தி வாய்ந்த பெரும் தெய்வமாக வர்ணிக்கின்றன.
********************************************************************************
********************************************************************************
சின்னமஸ்தாChinnamastā அல்லது அரிதலைச்சி, பத்து மகாவித்யா தேவதைகளில் ஒருத்தி. தன் தலையைத் தானே அரிந்து கையிலேந்தி, மறு கையில் கூன்வாள் ஏந்திக் காட்சி தரும் மிகக் குரூரமான வடிவம் இவளுடையது. "பிரசண்ட சண்டிகை" எனும் திருநாமமும் இவளுடையதே!
"தன்னைத் தியாகம் செய்தல்" என்ற கோட்பாட்டின் உருவகமே அரிதலைச்சி. சுயகட்டுப்பாடு, கலவி வேட்கை, கலவியாற்றல் முதலான பல கோட்பாடுகளின் உருவகமாகவும் இவள் கொள்ளப்படுகிறாள். தேவியின், வரமருளும் - வாழ்வைச் செறுக்கும் இரு குணங்களும் அரிதலைச்சிக்குப் பொருந்துகின்றன. குரூரமான தோற்றமும், ஆபத்தான வழிபாட்டு முறைகளும், உலகியலாளர்களுக்கும் சாதாரண தாந்திரீகர்களுக்கும், சின்னமஸ்தையின் வழிபாட்டைத் தடை செய்கின்றன.
ஏழாம் நூற்றாண்டில் வழிபடப்பட்ட பௌத்த சின்னமுண்டாவே, இந்து சின்னமஸ்தாவின் ஆரம்பம் என சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.[3] இன்னும் சிலர் வேதகால தெய்வமான ""நிர்ரித்ரீ"யின் மாறுபட்ட வடிவங்களே
சாக்தப் பிரமோதம் எனும் நூலில் சொல்லப்படும் அரிதலைச்சியின் நூறு பெயர்களில் ஒன்றான "பிரசண்ட சண்டிகை" என்பது, தேவாசுரப் போரில் அசுரரை அழித்தும், அவள் வெறியடங்காமல் தன் தலையரிந்து தன் குருதியை அருந்தியதால் சின்னமஸ்தை ஆனதாக மேலும் விரிகின்றது.[8] பொதுவாக அரிதலைச்சியின் எல்லாக் கதைகளிலும் அவளது தாய்மை, தன்னைத் தானே தியாகம் செய்தல், உலகநலன் முதலான விடயங்களே முன்னிலைப்படுத்தப் படுகின்றன.[9]
செம்பருத்திப்பூ நிறத்தவளாக வருணிக்கப்படும் அரிதலைச்சி, பதினாறு வயதும், விரித்த கூந்தலும், பிறந்த மேனியுமாய்க் காட்சிதருவள். நாகத்தைப் பூணூலாகவும், கபாலமாலையும் அணிந்து, அரிந்த தன் தலையை இடக்கையில் ஏந்தி, அதை அரிந்த கத்தரிக் கோலை வலக்கையில் ஏந்தி அகோரமாய் நிற்பாள். அரிந்த முண்டத்திலிருந்து ஊற்றெடுக்கும் மூன்று குருதிப் பீய்ச்சல்களில் ஒன்றை அவளது அரிந்த தலையும், ஏனைய இரண்டை அவள்தன் தோழியரான இடாகினியும் வாருணியும் அருந்துவர். அவளுக்குப் பீடமாக, கலவியில் ஈடுபடும் மதனனும் இரதி தேவியும் காணப்படுவர். பின்புலமாக சுடுகாடு காட்சி தரும்.[10][11] மதனன் இரதிக்குப் பதிலாக, அங்கு சிவன் படுத்திருக்க, சிவனுடன் உறவாடும் கோலத்திலும் அரிதலைச்சி காட்சியளிப்பதுண்டு.[12]
சின்னமஸ்தா தேவி | |
அதிபதி | |
தேவநாகரி | छिन्नमस्ता |
---|---|
வகை | மகாவித்யா, பார்வதி |
இடம் | சுடுகாடு |
மந்திரம் | ஸ்ரீம் ஹ்ரீம் ஹ்லீம் ஐம் வஜ்ரவைரோச்சனியே ஹூம் ஹூம் பட் ஸ்வாஹா |
ஆயுதம் | கூன்வாள் |
துணை | சிவன் |
*********************************************************************************
தூமாவதி என்பவள் பத்து மகாவித்யாக்களில் ஒருத்தி ஆவாள். "புகைத்தேவதை" எனப்பொருள் படும் பெயர்கொண்ட இவள், அன்னைத் தெய்வத்தின் குரூரமான வடிவங்களில் ஒன்றைத் தாங்கியவள். அசிங்கமான- வயதான விதவையாக இவள் சித்தரிக்கப்படுகிறாள். அமங்கலகரமான சந்தர்ப்பங்கள், தீய சகுனங்களுக்குரிய பறவையான காகம், பீடமாதங்கள் முதலியவை இவளுக்குரியவையாகச் சொல்லப்படுகின்றன.
பெருவூழிக்குப் பின்னும், படைப்புக்கு முன்னும் விளங்கும் வெறுமையை தூமாவதி குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. தலைசிறந்த குருவாகவும், வரங்களை அள்ளித் தருபவளாகவும், தூமாவதியைச் சொல்வது வழக்கம்.
வித்யாக்களுள் சேர்ப்பதற்கு முந்தைய, தூமாவதி பற்றிய பழைமையான குறிப்புக்களைக் காணமுடியவில்லை. வறுமை, விரக்தி, நம்பிக்கையின்மை என்பவற்றின் தேவதையான, இவளை, வேத காலத் தெய்வம் நிர்ரித்ரீயுடனும் அமங்கலத்தைக் குறிக்கும் அலட்சுமி, மூதேவி[1] போன்ற பழந்தெய்வங்களுடனும், இணைத்துப் பார்ப்பதுண்டு[2] அலட்சுமி, தூமாவதி இருவருமே, வயதனவர்களாக, காகத்தில் இவர்பவர்களாக, துடைப்பம் ஏந்தியவர்களாக சித்தரிக்கப்படுவது, இருவருக்குமிடையிலான முக்கியமான ஒற்றுமை ஆகும்.[1] தூமாவதி போல, அசிங்கம், கைம்மை, போர்க்குணம் முதலானவை, மூதேவி, அலட்சுமி, நிர்ரித்ரீ போன்றவர்களுக்கு கூறப்படாததால், அவர்களின் வழிபாடே, தூமாவதி வழிபாடாக வளர்ச்சி கண்டது என்று உறுதியாகக் கூறமுடியாது என்போரும் உண்டு
தேவி பாகவத புராணத்தில், சாகம்பரி தேவியின் யுத்தத்தில் உதவியவர்களில் ஒருத்தியாக தூமாவதியைக் குறிப்பிடுகின்றது.[3]"சக்திசங்கம தந்திரம்" நூல், தாட்சாயிணி தக்கன் வேள்விக்குண்டத்தில் பாய்ந்து உயிர்நீத்த பின், அவளது எரியும் சடலத்தின் புகையிலிருந்து கருநிறத்துடன் இவள் உதித்தாகச் சொல்கின்றது.[4] அடங்காப்பசியுடன் தன் கணவன் சிவனையே தின்று, அவள் விதவையானதாக "பிராணதோஷினி தந்திரத்தில்", ஒரு கதை உண்டு.[4]இன்னொரு வரலாற்றில், சும்ப நிசும்பரை அழித்த போது,துர்க்கையின் படையில் தோன்றி, புகை மூலம் தூமாவதி, அசுரர்களை மயக்கி அழித்ததாகச் சொல்லப்படுகின்றது.[5
தூமாவதி தந்திரமானது, அன்னை தூமாவதியை, வயதான அசிங்கமான கைம்பெண்ணாக வருணிக்கின்றது. மெல்லிய, உயரமான நோய்பீடித்தவளாக கானப்படும் அவள், மிகக் கொடியவள். கலைந்த கூந்தலும் அழுக்காடைகளுமே அவளது அலங்காரங்கள். பல்லுதிர்ந்து போனவளாக, ஒருகையில் முறமும், மறுகையில் அஞ்சேல் முத்திரையும் தாங்கி அவள் அமர்ந்திருப்பாள். காகத்தால் இழுக்கப்படும் தேரில் ஊரும் அவள், அடங்காப் பசியும் பெருவிடாயும் கொண்டவள்.[2][6][7]
"பிரபஞ்ச சராசர சங்கிரகம்" நூலின் படி, கருநிறத்தவளான தூமாவதி, பாம்பணிந்து காணப்படுவாள். கத்தியும் கபாலமும் அவள் கைகளில் துலங்க,[7] துடைப்பமும் முறமும் விளக்கும் தண்டமும் தாங்கியவளாக, பிச்சைக்காரி போல் ஆடையுடுத்து, அச்சமூட்டும் கூரிய கண்களுடன் காட்சி தருவாள். எலும்புகளைக் கடிக்கும் அச்சமூட்டும் ஒலி, அவள் வாயிலிருந்து எழுந்துகொண்டிருப்பதாக, "சாக்தப் பிரமோதம்" நூல் துதிக்கின்றது. அசுரப் பிணங்களை இரசித்துண்பவளாகவும், குருதிவிடாய் கொண்டவளாகவும் அவள் போற்றப்படுகிறாள்.
கைம்பெண்கள், அமங்கலத்தையும் கெட்ட சகுனத்தையும் குறிக்கும் இந்தியப் பண்பாட்டில், தெய்வீகக் கைம்பெண்ணான தூமாவதி, அச்சமூட்டுபவளாக வலம்வருகிறாள். ஏழைகள், பசித்தோர், நோயாளிகள், வறுமை, அழிந்த ஊர்கள், வனாந்தரங்கள், பாலைவனங்கள் அனைத்தையும் ஆளும் கட்டற்ற தெய்வம் அவள்.[2][8]
கைம்பெண்ணாயினும், எழிலோடு விளங்குபவளாக, காமரூபிணியாக பிற்காலச் சித்தரிப்புக்களில் அவள் கூறப்படுகிறாள். போதையில் வழிபடப்படும் தேவதையாகவும், மது, மாமிசம்,மச்சம், மைதுனம், தானியம் சேர்த்த "பஞ்சமகார பூசை" மூலம் திருப்திப்படுத்த வேண்டியவளாகவும் அன்னை தூமாவதி சொல்லப்படுகின்றாள்.[9]
சிவனே மறைந்த பின்னும் எஞ்சுபவள் இவளென்றும் காலத்தைக் கடந்தவள் என்றும் தூமாவதி போற்றப்படுகின்றாள். பிரபஞ்சம் எரிந்தழிந்த பின் எஞ்சும் பெரும்புகையே தூமாவதி. கொடியவளாயினும் இளகிய மனம் படைத்தவள். பெண்களால் சூழப்பட்டவள். மூதாட்டியாக சிறுவர்களுக்குப் பேரறிவை வழங்கும் குருவும் அவள்.தீமையில் விளைகின்ற, அல்லது தீமையின் முடிவைக் கட்டியம் கூறுகின்ற நன்மையை, அவள் குறிப்பால் உணர்த்துகின்றாள்.
தூமாவதியின் இருபதாம் நூற்றாண்டு இராசபுத்திர ஓவியம் ஒன்று.
| |
அதிபதி | |
வகை | பார்வதி, மகாவித்யா |
---|---|
இடம் | சுடுகாடு |
மந்திரம் | தூம் தூம் தூமாவதி ஸ்வாஹா |
துணை | சிவன் |
********************************************************************************
பகளாமுகி பத்து மகாவித்யாக்களில் ஒருத்தி. தன் கையிலுள்ள தண்டத்தின் மூலம், பகளா, தன் அடியவர்களின் தீய எண்ணங்களையும் அவர்களது எதிரிகளையும் அழித்தொழிப்பதாகச் சொல்லப்படுகிறது. வடநாட்டில்"பீதாம்பரி அம்மை" என்ற பெயரில் இவள் வழிபடப்பட்டு வருகிறாள்.
மஞ்சளாடை உடுத்து, இளம்பிறை சூடி, மஞ்சட் தாமரைகள் பூக்கும், தேன்கடல் நடுவேயுள்ள பொற்சிம்மாசனத்தில் பகளாமு்கி அன்னை வீற்றிருக்கிறாள். பொதுவாக இருகரத்தவளாக சித்தரிக்கப்படும் அன்னையின் வடிவம், ஒருகரத்தால், அசுரன் ஒருவனைத் தாக்கும் தண்டத்தையும், மறுகரத்தால், அவன் நாவைப் பிடித்து இழுத்தபடியும் காட்சிதரும். அன்னையவள் எதிரிக்கு ஏற்படுத்தும் செயலிழப்பை இவ்வடிவம் சுட்டிக்காட்டுகின்றது. நாற்கரத்தவளாக விளங்கும் பகளாவின் திருவுருவம் பற்றியும் சில நூல்கள் சொல்கின்ற
"பீதாம்பரா தேவி", "பிரம்மஸ்திர ரூபிணி" என்ற பெயர்கள் தாங்கும் பகளா, எந்தப் பொருளையும் அதன் எதிர்மாறு நிலைக்கு மாற்றும் வல்லமை கொண்டவள். பேசுவோரை ஊமையாக்குவாள். அறிவை அஞ்ஞானம் ஆக்குவாள், தோல்வியை வெற்றி ஆக்குவாள். வெற்றியி மறைந்துள்ள்ளா தோல்வியையும், வாழ்க்கையில் மறைந்துள்ள மரணத்தையும், துன்பத்தில் மறைந்துள்ள இன்பத்தையும் சுட்டிக் காட்டி, அவளது பக்தர்களுக்கு, பேரறிவூட்ட அவளால் முடியும்.
திரிகளைக் கட்டுப்படுத்தல் அதிபதி | |
வகை | மகாவித்யா |
---|---|
மந்திரம் | ஓம் ஹ்ரீம் பகளாமுகி சர்வதுஷ்டானாம் வசம் முகம் படம் ஸ்தம்பய ஜிஹ்வம் கீலய பூதம் விநாசய ஹ்ரீம் ஓம் ஸ்வாஹா |
ஆயுதம் | தண்டம் |
துணை | சிவன் |
*****************************************************************************************************************************
மாதங்கி என்பவர் சைவ சமயக்கடவுளான சிவபெருமானின் மனைவியாவார். இவர் பிரம்மாவின் குமாரனாகிய மதங்கர் என்பவரின் மகள்.
அம்பிகை, மதங்கரின் மகளாத பிறந்தமையால் மாதங்கி என அழைக்கப்படுகிறார். இவருக்கு ராஜ மாதங்கி, ராஜ சியாமளா என்றும் வேறு பெயர்கள் உள்ளன. இந்தியாவின் வடபகுதியில் சியாமளா தேவி என்று அறியப்படுகிறார். இதற்கு நீலம் கலந்த பச்சை நிறம் என்று பொருளாகும். இந்த தேவி சாக்த வழிபாட்டில் சப்தமாதாக்களில் ஒருவராகவும், தசமகா வித்தியாக்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார்.[1]
கமலை
திருமகள் அல்லது இலக்குமி அல்லது பொதுவழக்கில் லட்சுமி (Lakshmi) இந்துக்களின் கடவுளாவார். இவர் செல்வத்தை வழங்கும் கடவுளாகவும் விஷ்ணுவின் துணைவியாகவும் சித்தரிக்கப்படுகிறார். விஷ்ணுவின் அவதாரங்களின் துணையாக இவரும் சீதை, ருக்மணி, பத்மாவதி போன்று அவதாரம் எடுப்பதாக கூறுவதுண்டு.ஐஸ்வர்யா, வைஷ்ணவி, நாராயணி, பார்கவி, ஸ்ரீதேவி, ஜலஜா, மாதவி, சுஜாதா, ஸ்ரேயா எனப் பல்வேறுப் பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
அதிபதி | |
தேவநாகரி | लक्ष्मी |
---|---|
சமசுகிருதம் | lakṣmī |
வகை | தேவி (மூதேவியர்) |
இடம் | வைகுண்டம்,திருப்பாற்கடல் |
துணை | திருமால் |
*************************************** ********************************